வேர்களை நோக்கிய பயணம் - பிராமணர்கள்
வேர்களை நோக்கிய பயணம் - பிராமணர்கள்
க்ருபா என்னும் வெங்கட் Venkataraghavan KS அவர்களுடன் சில ஆண்டுகளுக்கு முன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் தனது சமீபத்திய பதிவில் தெரிவித்துள்ள கருத்துகளை வலியுறுத்திக் கொண்டிருந்தார்.
இன்னமும் அதே உறுதிப்பாட்டில் தான் இருக்கிறார் என்பது மகிழ்ச்சி தரும் ஒரு செயல்.
நானும் கூட அவரின் இந்தக் கருத்தை ஆதரிக்கிறேன்.
~
இனி, வெங்கட்டின் பதிவு :
Venkataraghavan KS
'ப்ராமனன்'எப்போ ஸ்வதர்மத்தை விட்டு பட்னத்துக்கு குடி பெயர்ந்தானோ அன்னிக்கே போச்சுன்னு பெரியவர்கள் வேதனையுடன் கூறுவார்கள் என கேள்வி பட்டு இருக்கிறேன் ..
'பருப்பு' போல் பேசுவதாக நினைக்க வேண்டாம்.. ஸத்-புத்தி,ஸாது ஸேவனம் விஷய ஞானம் அவனுக்கு ஏற்பட்ட அனுஷ்டானம்.. இவற்றால் வரும் அனுபவங்களை எவ்வித 'எதிர்பார்ப்புமில்லாமல்' தன்னை அனுகியவருக்கு ஏற்ப போதிப்பதும் ஞானத்தின் ஸாரத்தை பகிர்வதும் மட்டுமே அவனுக்கு முக்கியம் ..
இவற்றை கடைப்பிடிக்க வேண்டிய பொருளாதாரம் மற்றும் ஏனைய சூழ்நிலைகள் நடுவில் இல்லாமலலும்/மிகவும் குறைந்து போனாலும், தற்பொழுது அவை மெல்ல ஒரளவிற்காவது மீண்டு வருகிறது.
ஆனால் அவன் திரும்ப வருவதற்கு தயங்குகிறான்.
அவனுக்கு இந்த சூழ்நிலை மீது பெரிய நம்பிக்கை இல்லை. தான் அவ்வளவு 'கஷ்டப்பட' வேண்டிய அவசியமோ அதற்கேற்ற பலன் இருக்கும் எனவோ அவனுக்கு நம்பிக்கை இல்லை .
ஆனால் நான் இப்பதிவின் தொடக்கத்தில் குறித்தது போண்ற மன நிலை கொண்ட பிராமனர்கள் முடிந்த வரை பெரும் நகரங்களினிறுந்து வெளியேறி முன்போல் சிற்றூர்கள் கிராமங்கள் ஆகிய இடங்களில் குடி-பெயர்தல் நல்ல பயனைத் தரும் என்பது என் தாழ்மையான எண்ணம்.
~
இத்துடன் அவரின் பதிவு முடிகிறது.
இனி இது என் விருப்பம் :
வேரை நோக்கிச் செல்லுங்கள் பிராமணர்களே. என் அனுபவத்தில் சொல்கிறேன், கிராமங்களில் உங்கள் மீது இன்றும் மிகுந்த மரியாதை இருக்கிறது. இது வேறு தலைமுறை. அவர்களுக்கு உங்கள் மீது துவேஷம் இல்லை.
நீங்கள் விட்டுச் சென்ற இடம் வெற்றிடமாகவே இருக்கிறது. அதைப் பூர்த்தி செய்யுங்கள்.
வாழ்க்கையில் பணம் மட்டுமே குறிக்கோள் இல்லை. உங்களின் கல்வி, வாழ்வியல் பற்றிய தெளிவு, ஞானம் போன்றவற்றை அந்த எளிய மனிதர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எளிமையாக வாழுங்கள்.
உங்களுக்கு விதிக்கப்பட்ட தர்மம் அது தான் என்பது நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை.
பூர்வீகத்தை நோக்கிய பயணத்தை துவக்குங்கள். நெகிழ்ச்சியான வரவேற்பு உங்களுக்கு காத்திருக்கும் அங்கு.
~
பி.கு:
நான் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் பணியாற்றிய காலத்தில் சில கிராமங்களில் பிராமணர்களின் மீள் குடியேற்றம் நடைபெற்றிருப்பதை அறிந்து மகிழ்ச்சி கொண்டேன். (உ-ம்) ஆந்தக்குடி, மஞ்சக்குடி, கதிராமங்கலம்.
கை நிறைய சம்பளம் வழங்கிக் கொண்டிருந்த உத்தியோகத்தை விட்டு விட்டு கிராமங்களில் மீண்டும் குடியேறி இயற்கை விவசாயம் செய்கிற பிராமண இளைஞர்களுடன் பேசி உவகை அடைந்திருக்கிறேன்.
100 ஏக்கர் நிலத்தில் மொத்தமாக இயற்கை விவசாயம் செய்துவரும் RVS பண்ணை, கதிராமங்கலம் உரிமையாளர் மென்பொருள் வல்லுனராக இருந்த ஒரு பிராமண இளைஞரே.


Comments
Post a Comment