சூப்பர் டீலக்ஸ் - தமிழ் (2019)

சினிமா

SuperDelux (2019)(Tamil)
~

நான்கு வேறு வேறு கதைகளை அப்படியே கொண்டு சென்று அதன் போக்கிலேயே முடித்திருக்கலாம். ஆனாலும் அவைகளை ஒரு புள்ளியில் இணைய வைக்க முயற்சித்திருப்பதில் செயற்கைத்தனம் தெரிகிறது. நான்கு தனித்தனி ஷார்ட் பிலிம்களாக கூட எடுத்திருக்கலாம்.

படத்தில் இணைகோடுகளாக வரும் நான்கு கதைகளில் முதல் கதை தான் படத்தின் பெரிய பலம். அக்கதையை மட்டுமே மேலே எடுத்துச் சென்றிருக்கலாம். 

அக்கதையில் கணவனாக நடிக்கும் ஃபகத் ஃபாஸில் செம பெர்ஃபார்மன்ஸ். காரின் பின்னால் பிணத்தை வைத்துக் கொண்டு தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை சரக்காக நினைத்துக் கொண்டு குடித்து விட்டு சமந்த்தாவின் மேல் கோபத்தையும் வெறுப்பையும் கொட்டும் அந்த இடத்தில் நடிப்பில் பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

லொடலொட வாயன் விஜய்சேதுபதிக்கு சீனும் டயலாக்கும் ரொம்ப குறைச்சலா கொடுத்து அந்தக் கொடுமையில் இருந்து நம்மை காப்பாற்றியது இன்னொரு ஆறுதல். 

யுவனின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.  ஆக்சுவலி பெரும்பாலான இடங்களில் நாம் அன்றாடம் தெருக்களிலும் சாலைகளிலும் கேட்கும் சாதாரண குரல்களையும், ஓசைகளையுமே பின்னணியாக்கியிருப்பது அருமை. 

அதுவும் அந்த இண்டர்வல்லுக்கு முன் வரும் பின்னணி இசை செம.

விஜய் சேதுபதி-மிஸ்கின் சப்வேயில் சந்திக்கும் காட்சி, பசங்க தூக்கி எறியும் டிவி பக்ஸின் மண்டையில் வந்து விழுவது... இந்த மாமூல் சினிமேட்டிக் காட்சிகளை  தியாகராஜன் குமாரராஜாவிடம் எதிர்பார்க்கவில்லை. 

மாமூல் சினிமாவின் சரிவில், நழுவின தருணங்கள் இவை.

ஆகப்பெரிய பலவீனம் படத்தின் நீளம். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுகிறது படம். அவ்வளவு நேரத்திற்கான சுவாரஸ்யம் படத்தில் இருந்திருக்குமானால் நேரத்தை ஒரு பொருட்டாக கருத வேண்டிய தேவை எழுந்திருக்காது. ஆனால், படுபோரான காட்சிகளால் அடிக்கடி கொட்டாவி வருவதை தவிர்க்கவே முடியவில்லை.

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்றான #ஆரண்யகாண்டம் படத்தை பவர்ஃபுல்லாக தந்த தியாகராஜன் குமாரராஜா #சூப்பர்டீலக்ஸ் ஸில் சற்று ஓய்ந்துவிட்டார். 
~
சூப்பர்டீலக்ஸ் - கிச்சடி

Comments