சினிமா - கம்மாட்டிப்பாடம் - மலையாளம் (2016)
சினிமா
~
இன்றைய மாநகர் கொச்சி மாபெரும் நகரமாக urbanisation ஆவதற்கு கொச்சியை சுற்றியுள்ள அழகான கிராமங்களும் அதில் வசித்த விளிம்பு நிலை மக்களும் ரியல் எஸ்டேட் மாபியாக்களிடம் வீழ்ந்துபட்ட சமீபகால வரலாற்றை உணர்ச்சிகரமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜிவ் ரவி.
அப்படி வீழ்ந்துபட்ட நகரை ஒட்டிய அழகிய கிராமம் தான் கம்மாட்டிபாடம். அம்மக்களின் உறவை, பகையை, நட்பை, துரோகத்தை, பேராசையை, போட்டி பொறாமையை, தம் அழிவுக்கு தாமே துணைபோகும் அவலத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய படம்.
படத்தின் மிகப்பெரிய பலம் கேரக்டரைசேஷன். கிருஷ்ணன், பாலன், கங்கா... அவர்களுக்குள் நட்பு, பகை, காதல், துரோகம்.... சாதாரண கேங்ஸ்டர் படமாக மாறிவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள கதையை திறமையான நடிகர்களைக் கொண்டு உணர்வுபூர்வமான காட்சியமைப்புகளால் சமகால சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக மாற்றியிருக்கிறார் இயக்குநர்.
பாலனாக நடித்துள்ள மணிகண்டன் ஆச்சாரியும், கங்காவாக நடிக்கும் வினாயகனும் வேறெந்த பெரிய நடிகர்களையும் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடக்கூடிய திறமைசாலிகள்.
உண்மையை சொல்லப்போனால் நவாஸுதீன் சித்திக்கைவிட இவர்கள் இருவரும் பெஸ்ட்.
சமீப காலத்தில் பார்த்த நல்ல படங்களில் முக்கியமான ஒன்று கம்மாட்டிபாடம்.
~
❤️


Comments
Post a Comment