அஞ்சலி - காலம் மறந்த கவிஞன் - நா. காமராசன்
அஞ்சலி
காலம் மறந்த கவிஞன் - நா. காமராசன்
நண்பர் Sudha Karan காலையில் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ ... என்று ஸ்டேடஸ் போட்டபோது அவர் இந்த பாடலை ரொம்ப ரசித்துக் கொண்டிருக்கிறாரோ என்று தான் நினைத்தேன். கவிதைக்கு பொய்யழகு என்று ஜஸ்ட் ஒரு கமெண்டிட்டு விட்டு கடந்து விட்டேன்.
கவிஞர் காமராசன் மறைந்துவிட்டார் என்ற செய்தியை திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் சுவரில் பார்த்தபோது துணுக்குற்றேன்.
எண்பதுகளில் குறிப்பிடத்தக்க பாடலாசிரியர் அவர். புதுக்கவிதைகளின் பிதாமகர்.
MGR இன் பிற்காலப் படங்களில் பல்லாண்டு வாழ்க தொட்டு தொடர்ச்சியாக பாடல்கள் எழுதியிருக்கிறார்.
பின்பு கச்சிதமாக அடுத்த தலைமுறை கலைஞர்களுடனும் தன்னை பொருத்திக் கொண்டார். 80 களில் ரஜினியின் பல படங்களுக்கு பாடல்கள் எழுதிருக்கிறார்.
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ஆர்ப்பாட்டம் இன்றி அமைதியாக சாதித்தவர். இளையராஜாவின் அன்பிற்குரிய பாடலாசிரியராகவும் இருந்திருக்கிறார்.
~
அவரின் மரணம் திரைப்பட பாடல்கள் துறைக்கு ஒரு மாபெரும் இழப்பு ஆகும்.
அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
போய் வா நதியலையே....
~


Comments
Post a Comment