சினிமா - பிகில் - தமிழ் (2019)
சினிமா
பிகில் (2019)
~
எவ்வளவு மோசமான படமாக இருந்தாலும் அதில் நாலு நல்லது இருக்க தான் செய்யும்.
அந்த நாலு நல்லதுகள் :
1. AR ரஹ்மான் - சிங்கப்பெண்ணே... மற்றும் உனக்காக வாழ நினைக்குறேன்... பாடல்களுக்காக.
2. திருமணமான காயத்ரியை டீமில் மீண்டும் விளையாடவைக்க அவள் கணவனிடம் நயன்தாரா பேசும் காட்சி.
3. முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டவுடன் ஆண்டுக்கணக்கில் அறைக்குள் முடங்கிக்கிடக்கும் அனிதாவிடம் அவளை மீண்டும் விளையாட வலியுறுத்தி உத்வேகப்படுத்தும் விதத்தில் விஜய் பேசும் காட்சி.
4. மொக்கையான முதல் பாதியில் நயன்தாராவுக்கு அவர் அப்பா சர்ச்சில் திருமணம் நிச்சயம் செய்யும் அந்த காட்சி வரும் சில நிமிடங்கள்.
~
அவ்வளவுதான்.
இதை தாண்டி வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை.
பிகில் - விளையாட்டு என்னும் ஒரே நேர்க்கோட்டில் மட்டும் சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கக்கூடும்.


Comments
Post a Comment