அஞ்சலி - முகமது அலி

அஞ்சலி

முகமது அலி 
என் பால்ய பருவத்தில் ஆதர்ச ஹீரோ. 

படிக்கும் காலத்தில் புரூஸ் லீ படம் போட்ட ரவுண்ட் நெக் டீ ஷர்டுகள் அணிவது பேஷன் ஆக இருந்தது.அப்படிப்பட்ட காலகட்டத்தில்  முகமது அலி படம் போட்ட டீ ஷர்ட் அணிந்திருந்த ஒருவரை வியப்புடன் பார்த்தேன். அப்போது தான் அவரின் வாழ்க்கை வரலாறு பிரபல வார இதழ் ஒன்றில் தொடராக வந்துகொண்டிருந்தது. ரா.கி. ரங்கராஜன் எழுதினார் என்று நினைவு. முகமதலி படம் போட்ட டீ ஷர்ட் அணிந்திருந்த நபரிடம் எங்கு வாங்கினீர்கள் என்று கேட்டதற்கு அவர் திருப்பூரில் வாங்கியதாகத் தெரிவித்தார்.

என் பள்ளித் தோழனும், தெருவாசியும், பால்ய நண்பனுமான திண்டுக்கல் ரவி என்னும் ரவியின் தந்தை அப்போது திருப்பூரில் பணிபுரிந்து கொண்டிருந்தார். பாட்டியிடம் கெஞ்சிக் கூத்தாடி பெர்மிஷன் வாங்கி ரவியின் அப்பாவிடம் முகமதலி படம் போட்ட டீ ஷர்ட் வாங்கி வருமாறு கோரினேன். அடுத்த வாரம் இரண்டு டீ ஷர்டுகள் வாங்கி வந்தார் அவர். கெத்தாக அவற்றைப் போட்டுத் திரிந்த ஞாபகம் தான் இன்று அவர் மறைவைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் மின்னல் கீற்றாக நினைவில் வந்தது. 

பின்னை நாட்களில் அவர் பர்கின்சன் நோயால் அவதியுறும் படக்காட்சிகளைப் பார்த்தபோது வேதனையடைந்திருக்கிறேன்.

உழைப்பும், உத்வேகமும், கில்லர் இன்ஸ்டிக்ட் டும் இருந்தால் எத்தனை த் தடைகளயும் தாண்டி வரலாற்று முத்திரை பதிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிவிட்டு ஒரு சகாப்தமாய் வாழ்ந்து மறைந்திருக்கிறார் முகமதலி.
~

Comments