லைப்ரரி - பொலிவிழக்கும் புக்ஃபேர்
முன் குறிப்பு:
சென்ற ஆண்டு எழுதிய பதிவு இது.
இந்த ஆண்டு பெரிய மாற்றம் ஏதும் வந்திருக்காது என்று தான் நம்புகிறேன்.
லைப்ரரி
புக்ஃபேர்
~
பல ஆண்டுகள் கழித்து சென்ற சனிக்கிழமை புக்ஃபேர் சென்றேன்.
எண்ணூற்று சொச்சம் குப்பை ஸ்டால்களுக்கு மத்தியில் கொஞ்சமே கொஞ்சம் நல்ல ஸ்டால்கள். தேடி கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது.
ஒவ்வொரு பிரபல ஸ்டால்களிலும் யாராவது ஒரு எழுத்தாளர் உட்கார்ந்திருக்கிறார். புத்தகம் வாங்கி அவரிடம் நீடினால் ஆட்டோமேடிக்காக கையெழுத்து போட்டுத் தருகிறார். பாவம். மிரட்டி உட்கார்த்தி வைத்திருப்பார்கள் போலும் பதிப்பகத்தார்.
கருப்பு டீ சர்ட் அல்லது சட்டை, ஜீன்ஸ், கூட ஆண்,பெண் சகா அல்லது அவர்கள் மொழியில் தோழர்... அவர்களின் தேடல் என்னவென்றே புரியாமல் அலைபாயுதல்.. எங்கெங்கும் மெஜாரிட்டி காட்சிகள் இதுதான்.
அரைகுறை தகவல்களுடன் அவர்களுக்குள் நடைபெறும் கலந்துரையாடல்களை லைட்டாக ஒட்டுக் கேட்டால் படு காமெடி..
பிடித்த பதிப்பக ஸ்டால்களுக்கு முன் நின்று செல்ஃபி. புத்தகங்களைவிட ஓசியில் கொடுக்கும் விளம்பர குப்பைகளே கைகள் முழுவதும்.
இவர்கள் தான் பெரும்பாண்மையோர்.
சே... ஒரே போலி மயம். எங்கெங்கும். 🙄
சில ஆண்டுகளுக்கு முன்வரை குடும்பம் குடும்பமாக வருவார்கள்.
அதெல்லாம் இப்போது இல்லை.
நான் செலக்டிவ் ஆக சில புத்தகங்களை வாங்கினேன். அனைத்தும் "ஒரு சார்பு" புத்தகங்கள் தான்.
படித்துவிட்டு ஒவ்வொன்றாக லைப்ரரி ஹாஷ்டேக்கில் பதிகிறேன்.
~
பிகு: புக் ஸ்டால்களைவிட வாசலில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கேண்டினில் நல்ல கூட்டம். கர்நாடக சங்கீத சீசன் அகெடமிக்கள் போல.
~
😛


Comments
Post a Comment