அஞ்சலி - அன்னை

அஞ்சலி
~
இன்று என் தாயாருக்கு நினைவு நாள்.

பொது அறிவு, இசை ஞானம், புத்தகம் வாசிக்கும் வழக்கம், வறுமையிலும் செம்மையாக வாழும் கலை, நடைமுறை சாத்தியமான புரட்சிகர கொள்கைகளில் மட்டும் ஈர்ப்பு, தீவிர கடவுள் நம்பிக்கை, ஓரளவு ஆங்கில ஞானம் ...

...... என நான் இன்று பெற்றுள்ள அனைத்து நல்ல  குணங்களும் அவரிடமிருந்து நான் வரித்துக் கொண்டமையே.
~

என் பார்வையில்,  தனது சக வயதுப் பெண்களை விட மிக முற்போக்கான எண்ணங்களும், நடைமுறை வாழ்வியலும் கொண்டிருந்த என் தாயார்.., 

தனது வாழ்நாளிலேயே மிகவும் விரும்பிப் பார்த்த, அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்த படங்கள் .....

"நீயா"  போன்ற இச்சாதாரி நாக மனிதர்களைப் பற்றிய படங்கள் தான். 

என்ன ஒரு இனிய முரண் ...

❤️
~
வாழ்க்கை அழகானது - சில சமயங்களில் விசித்திரமானதும் கூட. 
அவரின் நினைவு நாள் அஞ்சலி. 


Comments