சினிமா - பாசமலரும் பாசமறியா பாமரனும்
சினிமா
~
நான் மெம்பரா இருக்கும் ஒரு Facebook குரூப்பில் பாசமலர் படம் பற்றிய ஒரு பதிவைப் பார்த்தேன்.
சில ஆண்டுகளுக்கு முன் நான் திருவாரூரில் பணிபுரிந்தபோது அய்யாசாமி என்றொரு சீனியர் அலுவலர் என்னுடன் பணியாற்றினார். பழைய பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே வேலை செய்வது அவர் வழக்கம்.
அப்படி ஒரு நாள் அவர் "மலர்ந்தும் மலராத.." பாடலை மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்த்போது, ஒரு வேலையாக நான் அவர் இருக்கைக்கு சென்றேன். என்னைப் பார்த்துவிட்டும் பாடலை நிறுத்தவில்லை. பாடிக்கொண்டே என்னை நிமிர்ந்து பார்த்தார்.
"அண்ணே.. பாசமலர் பாட்டு தானே இது...?" என்றேன்.
பாடுவதை நிறுத்தாமலேயே தலையை ஆட்டினார்.
அண்ணே .... நீங்க ரசிச்சு பாடறீங்க நல்லா இருக்கு. ஆனால் என்னால் இந்த படத்தை கொஞ்ச நேரத்துக்கு மேல் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. டிவியை வேறு சேனலுக்கு மாற்றிவிட்டேன் என்றேன்.
அவ்வளவு தான் கோபம் கொப்பளிக்க "என்னது பாசமலர் படத்தை பார்க்க முடியலியா? என்ன படம் தெரியுமா அது? காவியம் யா..." என்றார் சத்தமாக.
சத்தம் கேட்டு அப்போது கண்காணிப்பாளராக இருந்த என்னுடைய குரு, திரு. அப்பாராஜ் Apparaj Thangavel அவர்கள் தன்னுடைய சீட்டில் இருந்து எழுந்து வந்துவிட்டார்.
அவரிடம் அய்யாசாமி அண்ணன் அவர்கள் "இவருக்கு பாசமலர் படம் உட்கார்ந்து பார்க்கமுடியலியாம்... " என்று கோபமாக கூறினார்.
அவரும் "என்னது பாசமலர் படம் புடிக்கலியா..? என்னப்பா சொல்றே..? நிஜமாவா ? " என்று அதிர்ச்சியாக கேட்டார்.
"ஆமாம் சார்..." என்றேன்.
"யோவ்.. நீயும் உன் ரசனையும்.." என்று கடுப்பாக கூறிவிட்டு அகன்றார்.
அதன்பின் சினிமா பற்றி பேசும்போதெல்லாம் பலமுறை "நீ பாசமலர் படத்தையே புடிக்காதுன்னு சொன்னவனாச்சே.. " என்று கூறுவதற்கு இருவரும் தவறியதேயில்லை.
~
அதன்பின் நாகப்பட்டினம் மாற்றலாகி வந்தபோது அங்கேயும் இதே அனுபவம்.
இந்தமுறை நான் மிகவும் மதிக்கும் Parasuraman Undal சார்.
அவரிடமும் இதைக் கூறி வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.
~
இன்றைக்குப் பார்த்த அந்த குரூப் பதிவில் கமெண்ட் போடலாமா என்று யோசித்தேன்.
ஃபிளாஷ்பேக் ஞாபகம் வந்தது.
பேசாம லைக் போட்டுட்டு வந்துட்டேன். :)
~
இன்னமும் பாசமலர் படத்தை முழுமையாக பார்க்கவில்லை.
ஒரு நாள் முழுப்படமும் பார்க்கவேண்டும். ஆனால் முடியுமான்னு தெரியல.
~


Comments
Post a Comment