சிவாஜியும் எமர்ஜென்ஸியும்
EMERGENCY DAYS
சிவாஜியும் எமர்ஜென்ஸியும்
எமர்ஜென்சி காலத்தில் இந்திராவின் 20 அம்சத் திட்டம் வேகமாக இந்தியாவெங்கும் அமுல்படுத்தப்பட்டது.
வானொலியை திறந்தாலே 20 அம்சத் திட்டம் என்ற சொல் தான் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருந்தது.
இந்த நிலையில் எங்களின் ஒரே ஆறுதல் இலங்கை வானொலி தான்.
எமர்ஜென்சியின் இறுதிக் காலத்தில் நான் மயிலாடுதுறை கூறைநாடு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். கணக்கு ஆசிரியர் சாம்பசிவம், வகுப்பு ஆசிரியர் ஆல்பர்ட் அனைவரும் எமர்ஜென்சி ஆதரவாளர்கள்.
வீட்டில் எனது சித்தப்பா குடும்பத்திலும் அனைவரும் இந்திராவின் ஆதரவாளர்க்ளாக இருந்தனர்.
ரயில்வேயில் வேலை பார்த்த அவர் அப்போது நடைபெற்ற ரயில்வே வேலைநிறுத்ததில் பங்கு கொள்ளவில்லை.
~
நடிகர்திலகம் சிவாஜி எமர்ஜென்சி ஆதரவாளராக இருந்தார். 20 அம்சத் திட்டத்துக்கு ஆதரவாக 'அவன் ஒரு சரித்திரம்' படத்தில் நடித்தார். படத்துக்கு வரிவிலக்கு கிடைத்தது. இளைய தலைமுறை என்று மற்றொரு எமெர்ஜென்சி ஆதரவு படத்திலும் நடித்தார். படு மொக்கையான இரண்டு படங்களையும் சுந்தரம் தியேட்டரில் பார்க்க வேண்டிய துரதிர்ஷ்ட நிலை எனக்கு ஏற்பட்டது.
எமெர்ஜென்சிக்கு பின் நடந்த பொதுத் தேர்தலில் தென் இந்தியா இந்திராவின் பின் தான் நின்றது. ரேபரேலியில் தோற்ற இந்திரா கர்நாடக சிக்மகளூரில் மீண்டும் நின்று வெற்றி பெற்றார்.
முக்கியமான விஷயம் அறியாத அந்த வயதில் நான் ஜனதாவை ஆதரித்தேன். ஜார்ஜ் பெர்ணாண்டஸ் என் ஹீரோ அப்போது. இன்று யோசித்துப் பார்த்தால் அதன் காரணம் ஏன் என்பதே புரியவில்லை.
~


Comments
Post a Comment