அடேங்கப்பா அக்கப்போர்கள்
அடேங்கப்பா..
~
~
திருவருட்செல்வரில் சிவாஜி மகாபெரியவரின் பாடி லாங்குவேஜை உள்வாங்கி அப்பர் கேரக்டர் செய்திருப்பார். ஓக்கே. சிறந்த நடிப்பு அது. லட்சக்கணக்கானோர் பாராட்டிவிட்டனர்.
இந்த கமேண்டேட்டர் சிவாஜியை சிலாகிக்கட்டும். மகாபெரியவரை ஏன் இதில் கோர்த்துவிட வேண்டும்.
"சிவாஜியின் போஸ்டரை மகா பெரியவா பார்த்து.... " Etc..etc.... இதெல்லாம் என்னத்துக்கு?
சிவாஜி ரசிகர்களுக்கோ மகா பெரியவர் பக்தர்களுக்கோ இதனால் இவர் கம்யுனிகேட் செய்ய விரும்பும் செய்தி தான் என்ன?
அதன் நம்பகத்தன்மை நகைப்புக்குரியதாக இருப்பது தான் எண்ட் ரிஸல்ட்.
இதெல்லாம் படிக்கவோ, படிக்கச்சொல்லிக் கேட்கவோ சிவாஜி மற்றும் மகா பெரியவர் இல்லை என்பது தான் என்னைப் போன்றவர்களின் ஒரே மகிழ்ச்சி.
இவர்கள் போன்ற நிறைய சிவாஜி ரசிகர்கள் ஒரு மாதிரி கற்பனை உலகில் வாழ்கிறார்கள்.
சங்கரா...
~
☹️


Comments
Post a Comment