லைப்ரரி - ஒரு கடலோர கிராமத்தின் கதை
லைப்ரரி
ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான்
தமிழில் இதுவரை வெளிவந்துள்ள குறிப்பிடத்தக்க அருமையான நாவல்களில் "ஒரு கடலோர கிராமத்தின் கதை" யும் ஒன்று.
தோப்பில் கதை சொல்லும் பாணி அலாதியானது.
அவரின் எழுத்துக்களில் அரபிக்கரையோர மலையாளம் கலந்த தமிழ் பிரவாகமாக பொங்கி வழியும். அந்த தமிழ் தான் எவ்வளவு அழகு.
கதையின் காலம் இந்திய விடுதலைப் போராட்ட காலம். விடுதலைப் போராட்ட சம்பவங்கள் கதை நெடுக நிறைய இழைந்தோடும்.
ஒரு சாம்பிள் பாருங்களேன்.
~
"நாங்க முஸ்லிம்க. நாங்க இங்கிலீசு படிக்கீது ஹராம்".
"முஸ்லிம்க இங்கிலீசு படிச்சா என்ன?"
"இங்கிலீசு படிச்சா ஜஹன்னம் என்கிற நரகத்தில போவோம்".
"ஜின்னா சாஹிபு சீமையில போயி இங்கிலீசு படிக்கல்லையா ?"
"அவர் காபிர்".
😊
~
தோப்பிலின் நடை அனாயசம். படித்து தான் அதை உணரவேண்டும்.
மொழி அழகு 👌


Comments
Post a Comment