ஊர்வலம் - திருமயிலை திருவுலா
ஊர்வலம்
~
எனது தற்போதைய சென்னை வாழ்க்கை இன்றுடன் ஐந்து ஆண்டுகளைக் கடக்கிறது.
சென்னை வாசம் எனக்கு இது மூன்றாவது முறை
இந்த ஐந்தாண்டுகளில் நிறைய அனுபவங்கள். பணிபுரியும் இடத்திலும் வாழ்க்கையிலும்.
பணியில் சேரும்போது முற்றிலும் புதிய பணி, எவ்வாறு இதனை எதிர்கொள்ளப் போகிறோம் என்ற ஒரு மலைப்பு இருந்தது. நேர்மையான உயர் அலுவலர்கள் அன்பான சக அலுவலர்கள், திறமையான சார் நிலை அலுவலர்கள் அமையப் பெற்றது கடவுளின் அனுக்கிரகம் தான்.
இந்த துறையிலும் எனக்கென்று ஒரு பேர் எடுத்துவிட்டதாகவே நினைக்கிறேன். நல்ல பேர் தான். :)
தமிழ்நாடு முழுக்க பலமுறை சுற்ற வாய்ப்பு கிடைத்தது. நிறைய ஊர்கள், நிறைய மக்கள், அவர்களில் பல நல்ல நண்பர்கள் என முதல் மூன்றாண்டுகளில் ஏகப்பட்ட அற்புத அனுபவங்கள்.
~
மூன்றாண்டுகாலம் கழித்த பின்னர் பணிமாறுதலில் மற்றுமொரு நிறுவனத்தில் முதன்மை செயல் அலுவலர். இதுவும் எனக்கு புதிய பணி. Infact, நான் பணிபுரியும் துறையில் என் பணி நிலையில் இருக்கும் நிறைய பேருக்கு கிடைக்காத பணியிடம் இது.
ஆயிற்று. இங்கும் கிட்டத்தட்ட இரு ஆண்டுகள்.
இந்த இரு ஆண்டுகளில் நிறைய Tasks. இறைவன் அருளாலும், சக அலுவலர்களின் ஒத்துழைப்பாலும் எல்லாவற்றையும் திறமையாக கடந்தோம்.
இரண்டு நாட்கள் முன்னர் கூட, இந்த ஊரடங்கு காலத்திலும், மிகப்பெரிய ஒரு டாஸ்க்கை எங்கள் நிர்வாகம் மற்றும் சார் அலுவலர்களின் உதவி ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றினோம்.
பலன் பெற்றவர்கள் இன்னமும் வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர். நெஞ்சம் நெகிழ்கிறது.
நல்ல அலுவலர்கள் அமைந்துள்ள டீம் கிடைப்பது வரப்பிரசாதம். மறுபடியும் இறைவனுக்கு நன்றி.
~
இப்போது என் தனிப்பட்ட சென்னை வாழ்க்கைக்கு வருகிறேன்.
மறுபடியும் சென்னையா என்று வந்தபுதிதில் சற்று சலிப்பேற்பட்டாலும் அந்த சென்னை எப்போதும் போல் என்னை அன்பாய் அரவணைத்துக் கொண்டது.
கடந்த இரு முறைகள் நான் இருந்த சென்னையைவிட இப்போதைய சென்னை ஒரு பெரு மாநகரம்.
எண்பதுகளிலும், புத்தாயிரம் ஆண்டு துவக்கங்களிலும் நான் பார்த்த விருகம்பாக்கம், வளசரவாக்கத்துக்கும், இப்போதைய அதே இடங்களுக்கும் தான் எத்தனை வித்தியாசங்கள்.
அன்றைய #நேஷனல் தியேட்டர் இன்று சந்திரா மால் ஐனாக்ஸ். அன்றைக்கும் அதில் தான் நிறைய சினிமா. இன்றைக்கும் அதில் தான்.
ஆனால் பார்க்கும் அனுபவம் வித்தியாச வசீகரம். வாட் அ சேஞ்ச் ஓவர். :)
~
#மயிலாப்பூரில் 2015 ல் ஒரு பங்குனித் திருவிழா நேரத்தில் தான் பணியில் சேர்ந்தேன். தொடர்ச்சியாக அதிகார நந்திகளைக் காணும் பாக்கியம் கிடைத்தது கற்பகாம்பாளின் நற்கருணையால்.
இந்த ஆண்டு தான் இல்லை.
~
தியாகேசர் காத்ததைப் போல் கபாலீஸ்வரரும் காத்து அருள்வார் எப்போதும் என்ற நம்பிக்கை மனதில் ஆழமாக குடியிருக்கிறது.
வணக்கம் சென்னை.


Comments
Post a Comment