AIT - Aryan Invasion Theory - உடையும் கோட்பாடுகள்
AIT - Aryan Invasion Theory
உடையும் கோட்பாடுகள்
By Raja Shankar
புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் பொறுமையாகப் படியுங்கள்.
இன்று விடுமுறை தினம் தானே. புதியதாக சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாமே.
Raja Sankar அவர்களின் மிக நீண்ட பதிவு. நிறைய விஷயங்கள் உள்ளடங்கிய ஹெவியான பதிவும் கூட. நிறைய தகவல்கள் அறிந்துகொள்ளலாம். வாருங்கள்.
~
ஆரியப்படையெடுப்பின் இறுதி ஆதாரமாக சொல்லப்பட்ட குதிரை வளர்ப்பும் பொய் என ஆகிவிட்டது. இனிமேலாவது அந்த பொய் பரப்புரை நிறுத்தப்படுமா? ஆரியப்ப்படையெடுப்பு புளுகின் அடிப்படையும் அது எப்படி தகர்ப்பட்டதும்.
ஆரியப்படையெடுப்பு கொள்கையின் ஆரம்பம் ஜெர்மனியிலே.
ஹென்ரிச் ஷில்மென் அப்படீன்னு ஒரு ஜெர்மன் ஆராய்ச்சியாளர், கிரேக்கர்களின் டிராய் நகரை தேட அகழ்வாராய்ச்சி செய்கிறார். துருக்கியில் இருக்கும் ஹிஸ்ஸாரிலிக் எனும் நகரில் டிராய் இருந்ததற்கான அறிகுறிகள் கண்டு அகழ்வாராய்ச்சியை செய்கிறார். அங்கு ஒரு வித்தியாசமான முத்திரையை கண்டெடுக்கிறார். அந்த முத்திரை ஸ்வஸ்திகா. அந்த முத்திரையை பற்றி அறிய அவருடைய பிரெஞ்சு நண்பரான எமிலி லூயி பெர்ன்னாப் என்பவரிடம் கலந்து ஆலோசிக்கிறார். எமிலி பெர்ன்னாப் மும் அந்த முத்திரையை பார்த்து இல்லை என்பதால் அதை பற்றி பழைய நூல்களில் தேடுகிறார். எமிலி பெர்ன்னாப் ஏற்கனவே இந்து மதம், பவுத்த மதம் பற்றி அறிந்திருந்தார். இன்னோர் ஜெர்மானியரான மேக்ஸ் முல்லர் ஏற்கனவே ரிக்வேதம் முதலியவற்றை மொழி பெயர்த்திருந்தார் என்பதை நினைவு கூரவும். ரிக்வேதத்தில் இந்த ஸ்வஸ்திகா பற்றி குறிப்பை கண்டவுடன் அந்த முத்திரை மிகப்பழைய நகரமான டிராயில் எப்படி வந்தது என்பதற்கு ஒரு கொள்கையை முன்வைக்கிறார். அது தான் ஆரிய இனக்கொள்கை.
பெர்ன்னாப் இன் கருத்துப்படி ஆரியர்கள் ஐரோப்பா முழுவதும் இருந்த மிகவும் முன்னேறிய இனத்தினர். அந்த ஆரியர்கள் பின்பு இந்தியா வரை பரவினார்கள். ஆரிய மதத்தை பின்பற்றுபவர்களாகவும் மிகவும் கவர்ச்சிகரமான திடகாத்திரமான உடலமைப்பு கொண்டவர்களாகவும் மிக அறிவாளிகளாகவும் இருந்தனர். ஐரோப்பாவில் இருர்ந்த ஆரியர்கள் பின்பு கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டனர். சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் ஆரியர்களின் ஆதி மொழியில் இருந்து தோன்றியவை. ஸ்வஸ்திகா என்பது ஆரியர்களின் தீ மேடையை மேலிருந்து பார்த்தால் தெரியும் வடிவமே ஆகும் என்பதாகும்.
பெர்ன்னாப்பின் சமகாலத்தவரும் ஆரிய இனக்கொள்கையை ஆரம்பித்து வைத்தவருமான ஆர்தர் டி கொபினூ அவருடைய புத்தகமான மனித இனங்களில் ஏற்றத்தாழ்வு இல், ஆரிய இனக்கொள்கையை விளக்கி உலகில் தோன்றிய அனைத்து நாகரீகங்களும் ஆரியர்களால் தோற்றுவிக்கப்பட்டவையே, ஆரியர்களின் இன்றைய சந்ததி ஐரோப்பிய வெள்ளையர்களே என்பதை விளக்கி எழுதியிருந்தார். இந்த கொள்கைக்கு அகழ்வாராய்ச்சி சான்றாக இந்த ஸ்வஸ்திகா அமைந்தது. இவர்கள் மட்டுமல்லாது இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அன்னிபெசண்ட் பங்கெடுத்த தியோபிசி எனும் கொள்கையும் இத்தகையக இனவாதத்தை முன்வைக்கிறது. தியோபிசியின் இன் கருத்துப்படி திராவிடர்கள் லெமூரியா கண்டத்தில் இருந்து வந்த நாகரீமற்றவர்கள், லெமூரியர்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவர்களாக இருந்து பின்னர் மனிதர்களைப்போல் இனப்பெருக்கம் செய்பவர்களாக மாறினார்கள் என்பதாகும். தமிழ்நாட்டில் பலர் இதையெல்லாம் படிக்காமல் லெமூரியா, லெமூரியாக்கண்டம் ஆதிகுடி என பெருமையுடன் சொல்லிக்கொண்டு இருப்பது வேறு விஷயம்.
ஸ்வஸ்திகா பற்றிய இந்த கருத்துக்கள் ஐரோப்பாவில் பரவலானதுடன் நாசிக்களும் ஹிட்லரும் தங்களை ஆரியர்கள் என சொல்லிக்கொண்டதும் நடந்தது. ஹிட்லரின் இந்த நம்பிக்கைகளை ஹாலிவுட் படங்களிலே காண்பித்திருப்பார்கள். இந்த அவெஞ்சர்ஸ், ஹெல் பாய் போன்ற படங்களிலே வெளிப்படையாகவே காட்டியிருப்பார்கள்.
இப்படி ஆரம்பித்த ஆரிய இனக்கொள்கைக்கு அடுத்த ஆதாரமாக ஒன்றை காட்டினார்கள். அதுவும் ஜெர்மனியிலே தான். அது சம்ஸ்கிருதம் மற்ற ஐரோப்பிய மொழிகளுடன் ஒத்துப்போவதாக நம்பினார்கள். இங்கே நம்பினார்கள் என்று தான் சொல்லுகிறேன் ஏனென்றால் அவர்களின் ஆராய்ச்சி அந்தளவிலே தான் இருந்தது. பல மொழிகளை ஆராய்ந்து அவை ஒத்துப்போவதாக என பார்த்து அதை இலக்கணரீதியாக, சொற்பொருள், எழுத்தமைப்பு போன்றவைகளை கவனித்து முடிவு சொன்னார்கள் என நினைத்தால் அது தவறு. சமஸ்கிருதத்திலே இருந்து வெறுமனே ஒரு சில நூறு வார்த்தைகளை எடுத்துக்கொண்டு அது போல வரும் வார்த்தைகளை மற்ற ஐரோப்பிய மொழிகளிலே எடுத்து ஆராய்ந்ததாக சொல்லி சொன்னார்கள். சமஸ்கிருதத்தின் இலக்கணமும் குதற்ப்பட்டது என சொல்லி தெரிந்து கொள்ளவேண்டியதில்லை. இப்போது என்னாயிற்று என்றால் அவர்கள் எழுதுவது தான் சமஸ்கிருத இலக்கணம் என ஆகிவிட்டது. இதை ஆரம்பித்து வைத்தது வில்லியம் ஜோன்ஸ் என்பவர்.
ஒப்பிலிக்கண ஆராய்ச்சி சமஸ்கிருதத்திலே இருந்து ஒரு லட்சம் சொற்கள், ஐரோப்பிய மொழிகளிலேயும் கிரேக்கம், லத்தீன் போன்றவற்றிலேயும் ஒரு லட்சம் சொற்களை எடுத்து ஆராய்ந்து இதிலே ஐம்பதாயிரம் சொற்கள் ஒன்றி வருகின்றன எனவே இதை இப்படி வந்திருக்கலாம் என சொல்கிறோம் என சொல்லவில்லை. அப்படி ஒரு ஆராய்ச்சி இன்று வரை கிடையாது. சமஸ்கிருதத்திலே மாதா என்றால் லத்தீனிலே மாதா என இரண்டும் என்ற கதை எழுதிவிட்டு போய்விட்டார்கள். இதை பார்த்த நம்மூர் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் சும்மா இருப்பார்களா பெனிசூலார் எனும் ஆங்கில வார்த்தைக்கு பெண் இன் சூல் ஆர் என விளக்கம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆரம்பம் கிடைத்தாயிற்று, மொழியும் கிடைத்துவிட்டது ஆனால் இந்தியாவிலே அதுவும் அடிமை இந்துக்களிடம் அந்த மொழி இருக்கிறது. அதுமட்டுமல்லாது ஏகப்பட்ட மொழிகள் இந்தியாவிலே இருக்கின்றன இதுக்கு என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்த போது இரண்டு விஷயங்கள் நடந்தன.
ஒன்று இங்கே திராவிட மொழி ஆராய்ச்சி என்ற பெயரிலே ஒரு குப்பையை இந்த கால்டுவெல் எழுதி எல்லா தென்னிந்திய மொழிகளும் வேறானவை என நிறுவியதாக சொல்லப்பட்ட பொய். அடுத்து மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா அழிவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரியர்களுக்கு எதிராக நிறுத்த ஒரு ஆட்களாக திராவிடர்களும் ஆரியர்கள் வந்து அழித்ததாக சொல்ல ஒரு இருப்பிடமும் கிடைத்தாயிற்று. இந்து சமவெளியிலே இருந்த திராவிடர்களை அழித்து தெற்கே துரத்தியதற்காக இந்துக்கடவுள்களை குற்றம் சுமத்துகிறேன் என மோர்டிமர் வீலர் எனும் இனவெறி பிடித்த அகழ்வாய்ராச்சி நிபுணர் இந்த ஆரிய படையெடுப்பு கொள்கையை முழுதாகக எழுதுகிறார். இந்த வீலர் என்பவர் இந்தியர்கள் மிகவும் மோசமானவர்கள் அவர்களை அடித்து உதைத்துத்தான் திருத்தவேண்டும் என கருத்தும் செயல்பாடுகளும் உடையவர். இப்படி பட்ட ஒரு இனவெறியனை பின்பு இந்திய தொல்லியல்துறைக்கு தலைவராக்கி அழகுபார்த்தது அன்றையை கொள்ளைய அரசு. அகழ்வாராய்ச்சிகள் எப்படி நடந்திருக்கும் என சொல்லித்தெரியவேண்டியதில்லை.
வெளியே இருந்து ஆரியர்கள் வந்தார்கள் என சொல்லியாற்று. சமஸ்கிருதத்தையும் இன்னபிறவற்றையும் கொள்ளையடித்து ஐரோப்பிய வம்சாவளி என சொந்தம் கொண்டாடியாற்று. ஆனால் எங்கிருந்து எப்படி வந்தார்கள் என்பதற்கு ஒரு வழி வேண்டுமே. அது தான் மத்திய ஆசியாவின் புல்வளரும் சமவெளிகளிலே இருந்து வந்ததார்கள். அதுவும் குதிரை ஓட்டிக்கொண்டு வந்தார்கள் என கதை எழுதினார்கள். ஆதாரம்? ஆதாரம் என்ன ஆதாரம் அவர்கள் எழுதுவது தானே வரலாறு. அவர்கள் எழுதுவது தானே ஆதாரம்.
இந்த இடத்திலே குதிரை முக்கியத்துவம் பெறுகிறது. குதிரை இந்தியாவின் சொந்த விலங்கு அல்ல என முடிவு கட்டி இந்தியாவிலே இருக்கும் குதிரைகள் அனைத்தும் வெளியே இருந்து வந்தவை தான் எனவே அப்படி வந்திருந்தால் அது ஆரிய படையெடுப்பினால் மட்டும் வந்திருக்க முடியும் என மொத்த வரலாற்றையும் எழுதிவிட்டார்கள். அப்படி வந்திருக்கும் குதிரைகள் மத்திய ஆசியாவிலே இருந்து வந்திருக்கவேண்டும். அப்படியானால் மத்திய ஆசியாவிலே குதிரைகளை காட்டுவிலங்கிலே இருந்து வீட்டு விலங்கிற்கு மாற்றீய நிகழ்வுகள் இருந்திருக்கிறதா என்றால் இருந்திருக்கிறது என முடித்துவிட்டார்கள்.
"வால்காவில் இருந்து கங்கை வரை" எனும் ஒரு கற்பனைக்கதையை படித்த நண்பர்களுக்கு நான் அடுத்து சொல்லவருவது என்னவென்று புரிந்திருக்கலாம். ராகுல சாங்கிருத்தியானின் பொய்யும் புரட்டும் நிறைந்த இனவெறி பரப்புரையை படிக்காதவர்களுக்கு அது என்ன என சொல்லிவிடுகிறேன்.
இன்றைய வால்கா நதிதீரத்திலே யம்னாயா எனும் ஒரு கலாச்சாரம் இருந்ததாகவும் அவர்கள் அப்படியா பல்கி பெருகி குதிரையை வீட்டுவிலங்காக வளர்த்தாகவும் அப்படியே உணவு தேடி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து மத்திய ஆசியா, இந்தியா, ஈரான் என வந்துவிட்டதாகவும் வரலாறு எழுதப்பட்டுள்ளது. எவ்வளவு உண்மை என்பது ஒரு புறம். ஆனால் இந்த குதிரையை வீட்டுவிலங்காக்கியதற்கு நேரடி ஆதாரமோ அல்லது இந்தியாவிலே குதிரை இல்லவே இல்லை என்பதற்கும் ஆதாரமோ இருக்கிறதா என பார்த்தால் கிடையாது.
இன்றைய கஜகஸ்தானிலே முன்பு போஏட்டாய் எனும் மக்கள் இருந்ததாகவும் அவர்கள் குதிரையை வீட்டுவிலங்காக பயன்படுத்திய ஆதாரம் உண்டு அவர்கள் இதை மேலே சொன்ன யம்னாயா எனும் மக்கள் வரும்போது அவர்களிடம் கற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்று தான் இதுவரை கதை எழுதப்பட்டுவந்தது.
ஆக இதுவரை இந்த ஆரியப்படையெடுப்பு கொள்கைக்கு என்ன ஆதாரம்? ஸ்வஸ்திகா முத்திரை ஐரோப்பாவிலே கிடைத்தது, சம்ஸ்கிருதமும் ஐரோப்பிய மொழிகளும் ஒன்றாக இருக்கிறது எனும் பொய், குதிரை இந்தியாவிலே இல்லை எனும் பொய்.
இதுல ஸ்வதிகா இப்போ உலகமும் முழுவதும் கிடைக்கிறது என்பதால் அது இப்போ பெரிசா எடுப்பதில்லை. சமஸ்கிருதம் வைத்து நீருபிப்பதும் இன்று வரை கடினமாக இருக்கிறது. ஆனா இந்த குதிரை இருக்கே அதோட மரபணு பரிசோதானை எளிதிலே நிரூபித்துவிட்டது இது பொய் என.
இந்த இடத்திலே மனிதர்களின் மரபணுவையும் எடுத்து பரிசோதிச்சாங்க. அதுவும் பொய் என ஆகிவிட்டது ஆனா அதோட விஷயங்கள் வேற என்பதால் முதலிலே குதிரை மரபணுவை பார்ப்போம். அப்புறம் இதுக்கு போவோம்.
இதுநாள் வரை குதிரையிலே காட்டுவிலங்கு வகை இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது என நம்பினாங்க. அது இல்லை எனவும் இப்போது இருக்கும் எல்லா குதிரைகளுமே வீட்டுவிலங்காக பழக்கப்படுத்தப்பட்ட குதிரைகள் தான் எனவும் நீருபணம் ஆகியிருக்கு.
அதை விட பெரிய சிக்கல், இந்த யம்னாயா மக்களுக்கும் போஏட்டாய் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போஏட்டாய் மக்கள் தனியே குதிரைகளை வளர்த்தார்கள் என மரபணு சோதனை சொல்லுது. அப்போ ஆரிய படையெடுப்பு? பொய்.
குதிரை மரபணு இப்படீன்னா மனித மரபணு சோதனை என்ன சொல்லுது? மனித மரபணு சோதனை வெறுமனே 50 பேரிடம் தான் எடுக்கப்பட்டது என்பதை கவனத்திலே கொள்ளுங்க. அதிலே ஒட்டுமொத்த மரபணுவும் ஐரோப்பியர்களிடம் இருந்து வேறானது ஆனால் அதிலே வடக்கு தெற்கு என்பதிலே இரண்டாக பிரிந்து இருக்கிறது என ஒரு ஆய்வும், இன்னோர் ஆய்வு இந்தியாவிலே கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட குழுவகைகளாக இருக்கிறது எனவும் சொல்லுது. உடனே இது தான் வடக்கு தெற்குக்கு வித்தியாசமான்னா இல்லே. ஏன்? பிராமணர்கள் என்று அறியப்பட்டதிலே வடக்கு தெற்கிலே இரண்டிலும் உண்டு. எனவே இது வேறு ஏதோ பிரச்சினை அல்லது இன்னமும் ஆயிரக்கணக்கான பேரிடம் மரபணு எடுத்து ஒப்பிட்டு பார்க்கவேண்டும் என சொல்லப்படுகிறது.
இதை ஏன் இப்போது விரிவாக எழுதவேண்டும் என கேட்டால் கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஏதோ ஒரு தொலைக்காட்சியிலே ஒரு எயுத்தாலர் (காவல் கோட்டம் எழுதிய வெங்கடேசன் என நினைக்கிறேன் ) ஆரிய இனக்கொள்கை நீருபிக்கப்பட்டது அதுவும் மரபணு சோதனை மூலம் நிருப்பிக்கப்பட்டது, மங்கோலாயிடுகல் ஆஸ்திரேல்யாஸ்டுகள் என முங்கி கொண்டிருந்தார். கேட்க சகியாததால் மாற்றிவிட்டேன். இன்னமும் இதை தமிழக அறிவு சீவித்தளத்திலே பிடித்து தொங்கிக்கொன்டு இருக்கும் கோஷ்டிகளும் உண்டு. ஆனால் தமிழிலே ஒரு சிறிய அறிமுகம் கூட பார்க்கமுடியாது. இருப்பது எல்லாம் இனவெறிய நிறவெறிய குப்பைகள் தான்.
~


Comments
Post a Comment