சினிமா - கலைஞர்களின் கலைஞன் (3)

சினிமா

கலைஞர்களின் கலைஞன்

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்.

அவரின் பிந்தைய கால கட்டப் படங்களை மட்டுமே பெரும்பான்மையாக பார்க்க நேர்ந்த பருவத்தில் வளர்ந்தவன் நான்.

இருந்தும் அவ்வப்போது வாய்ப்பு கிடைத்த நேரங்களில் மன்னார்குடி செண்பகா தியேட்டரில் புத்தம் புதிய காப்பியாக வெளியிடப்பட்ட வீ.பா. க. பொம்மன், கப்பல் ஓட்டிய தமிழன், கர்ணன், கௌரவம், ஆகிய படங்களில் அவரின் நடிப்பைப் பார்த்து அசந்திருக்கிறேன். 

அதிலும், குறிப்பாக கர்ணன்.
~

முதன் முதலில் வீட்டில் டி.வி. வாங்கிய காலத்தில் வாடகைக்கு வீடியோ டெக் எடுத்து அதில் முதலில் போட்டுப் பார்த்த திரைப்படம் கர்ணன் தான்.
~

எந்த வேடமாக இருந்தாலும் அந்த வேடமாகவே மாறி நடிக்கும் அவரின் நடிப்பு அற்புதமானது. (உ-ம்) பாரிஸ்டர் ரஜினிகாந்த், பிரஸ்டிஜ் பத்மனாபன், அப்பர் சுவாமிகள், ராஜ ராஜ சோழன், அடுக்கிக் கொண்டே போகலாம்.
~

வீட்டில் அம்மா, பாட்டி, மாமா, கஸின்கள் எனப் பெரும்பாண்மை சிவாஜி ரசிகர்களுடனேயே தான் என் பால்யம் கழிந்தது.
~

அவர் வாழ்ந்த சகாப்தத்தில் நானும் கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கிறேன் என்ற மகத்தான பெருமை ஒன்றே என் வாழ்நாளைக்கு போதுமானது.
~

ஓவியம் நன்றி Jeeva sir.

Comments