சினிமா - கலைஞர்களின் கலைஞன் (2)

சினிமா 

கலைஞர்களின் கலைஞன் (2)

விழுப்புரம் சின்னையா கணேசன் என்கிற சிவாஜி கணேசன்.
~
இது அனைவரும் அறிந்ததே. 
~
மன்னார்குடி பக்கம் கேட்டால் அவர்கள் சொல்வது #வேட்டைத்திடல் சின்னையா #மன்றாயர் கணேசன்.
~
மன்னார்குடியில் இருந்து தேவன்குடி செல்லும் வழியில் நடுவில் இருக்கும் சிற்றூர் தான் வேட்டைத்திடல்.

சிவாஜியின் தந்தை சின்னையா அவர்களின் பூர்வீகம் இது தான்.
~
மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி யில் நான் படித்தபோது வேட்டைத்திடல் மற்றும் அதன் பக்கத்து ஊரான அரிச்சபுரத்தில் இருந்து வந்து என்னுடன் படித்தவர்கள் பெருமையுடன் சொல்வார்கள் சிவாஜி அவர்கள் ஊர் என்று.
~
மன்றாயர் பட்டப்பெயர் உள்ள கள்ளர்  குடும்பத்தில் பிறந்த அரிச்சபுரத்தை சேர்ந்த பாஸ்கர் என் வகுப்புத் தோழன். சிவாஜியும் மன்றாயர் தான். 
~
ஊதுபத்தி க்காரர் வீடு என்று சொல்லப்படும் மன்னார்குடி உப்புக்காரத் தெருவில் உள்ள தஞ்சை AKC மருத்துவமனை உரிமையாளர்களின் உறவினர் சிவாஜி என்று ஒரு தகவலும் உண்டு. அவர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளுக்கு சிவாஜி குடும்பத்தில் இருந்தும், மனோரமா குடும்பத்தில் இருந்தும் கண்டிப்பாக ஒருவர் கலந்து கொள்வர்.

நான் பள்ளிப் பருவத்தில் நேரில்  பார்த்திருக்கிறேன்.
~
பின்னர் கும்பகோணத்தில் நான் இருந்த காலத்தில் அருந்தவபுரம் கூட்டுறவு சங்கத்தின் தனி அலுவலராக கொஞ்ச காலம் பணியாற்றினேன். சிவாஜியின் சம்பந்தி அதாவது பிரபுவின் மனைவி ஊர் அது. 

அவர்கள் வீட்டில் ஒரு முறை சாப்பிட்டிருக்கிறேன்.

Comments