சினிமா - ஒரு ஓடை நதியாகிறது (1983)
சினிமா
ஒரு ஓடை நதியாகிறது (1983)
தலையை குனியும் தாமரையே ..
தென்றல் என்னை முத்தமிட்டது ...
போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் இடம்பெற்ற ஸ்ரீதரின் "ஒரு ஓடை நதியாகிறது" படத்தை முரசு டிவி யில் முழுக்க உட்கார்ந்து பார்த்தேன்.
ஸ்ரீதரின் ஃபேவரிட் முக்கோண சப்ஜெக்ட். ரொம்ப டீஸண்ட் ஆக எல்லா கதாபாத்திரங்களும் படைக்கப்பட்டிருப்பதில் ஸ்ரீதரின் திறமை தெரிகிறது. வில்லன், கிளைமாக்ஸ் என்று எதுவுமே இல்லை. சந்தர்ப்பம் தான் வில்லன்.
ரகுவரன் பிற்காலத்தில் ஒரு பெரிய ரவுண்ட் வருவார் என்ற நம்பிக்கைக்கு அடித்தளம் இட்டுக் கொடுத்த படம். சூழ் நிலையால் தவறு செய்து விட்டு மன உறுத்தலில் வாழும் கேரக்டரை எக்ஸலண்ட் ஆக செய்திருக்கிறார்.
ஏனோ தெரியவில்லை ரகுவரன் வில்லத்தனமான ரோல்களிலேயே பிற்காலத்தில் பெரும்பாலும் அறியப்பட்டுவிட்டார்.
சுமலதாவும், ஏ.ஆர்.எஸ். சும் கூட அருமையாக, யதார்த்தமாக நடித்திருக்கின்றனர்.
குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியது சுமலதாவின் மகனாக வரும் அந்த சிறுவன். படத்தின் முக்கியமான அந்த கேரக்டரில் படு யதார்த்தமாக, செம மெச்சூரிட்டியுடன் நடித்திருக்கிறான்(ள் ?). ஒரே குறை அவனு(ளு ?)க்கு பெண் ஒருவர் கொடுத்திருக்கும் டப்பிங்.
நல்ல சப்ஜெக்ட். ஸ்ரீதர் போன்ற திறமையாளர்கள் இன்னும் சற்று நன்றாக இந்தக் கதையை ஹேண்டில் செய்திருக்கலாம். ஏனோ தெரியவில்லை சற்றுக் கோட்டைவிட்டு விட்டார் என்பது போல் தோன்றுகிறது.
~
கதையை கொஞ்சம் மாற்றி திரைக்கதையை மெருகேற்றி இப்போதும் ரீமேக்க்லாம்.
படம் கண்டிப்பாக ஓடும்.
80களில் வந்த நல்ல தமிழ்ப்படம் பார்க்க நினைப்பவர்கள் அவசியம் பார்க்கலாம்.
~
சுவாரஸ்யமான ஒரு பி.கு.:
படத்தின் ஆரம்ப காட்சிகளை பார்க்காததால் என்ன படம் என்று கேட்டதற்கு என் மனைவி கூறியது, "ஒரு நதி ஓடமாகிறது".
அவர் தெலுங்கு தேசம். இவ்வளவு தெளிவாக கூறியதே வியப்பு தான்.
😊


Comments
Post a Comment