டூரிங் டாக்கீஸ் : (6)

டூரிங் டாக்கீஸ் : (6)


இசை கேட்டால் புவி அசைந்தாடும் - (III)

TMS அவர்கள் ஒவ்வொரு நடிகர்களின் ஸ்டைலுக்கு ஏற்ப குரலில் சிறு சிறு வித்தியாசங்களை செய்துகொண்டு அந்த நடிகரே பாடுவது போல தோற்றம் ஏற்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்தவர். பெரும்பாலான நடிகர்களுடன் அவரின் குரல் ஒத்துப்போனாலும் சிலருடனான ஒற்றுமை பிரமிக்க வைக்கும்.

அவ்வாறு கச்சிதமாக அவரின் குரல் பொருந்திய நடிகர்களுள் 'மக்கள் கலைஞர்' ஜெய்சங்கரும் ஒருவர்.

மன்னிப்பு படத்தில் இடம் பெற்றிருந்த 'வெண்ணிலா வானில் வரும் வேளையில்...' இப்படியான வகையை சேர்ந்த பாடல். என்ன ஒரு கச்சிதமான பொருத்தம்...! சுப்பையா நாயுடு இசையில் வெளிவந்த அந்த பாடலை இன்று கேட்டாலும் எனக்கு மனதில் அப்பாடலின் காட்சியும் ஓடத் துவங்கிவிடும்.

ஜெய் சங்கருக்காக TMS பாடிய பாடல்களுள் குறிப்பிடத்தக்க மற்றுமொரு பாடல் - 'யார் நீ' படத்தில் வரும் 'பார்வை ஒன்றே போதுமே...'. 

வேதா இசையில் வெளிவந்த பெரும்பான்மையான பாடல்கள் ஹிந்தி பாடல்களின் தழுவல்களாக இருந்த போதிலும், தழுவல் என்பதே தெரியாமல், தன் குரல் வளத்தால் அப்பாடல்களை மேலும் இனிமையாக்கினார் TMS அவர்கள்.

இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் - வல்லவன் ஒருவன் 
நான் மலரோடு தனியாக - இரு வல்லவர்கள் 
நீ எங்கே என் நினைவுகள் அங்கே - மன்னிப்பு 
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே - ஆயிரம் பொய் 
நல்ல நாள் பார்க்கவோ - பொம்மலாட்டம் 
பொன் வண்ண மாலையில் - வரவேற்பு 
நாள் நல்ல நாள் - பணக்கார பெண் 
ஒ மைனா ஒ மைனா - நான்கு சுவர்கள் (TMS ஜெய் சங்கருக்காக பாடியிருப்பார் )
உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இரவும் பகலும் 

சிவாஜி மற்றும் MGR ஆகியோருக்காக ஆயிரக்கணக்கான பாடல்களை TMS பாடியிருக்கிறார்.அதில் சிலவற்றை தேர்ந்தெடுப்பது என்பது குருடர்கள் யானையை தடவிப் பார்த்து உணர்வது போன்றது. 

தேர்ந்தெடுக்க முடியாது என்பதால் சிலவற்றை மட்டும் தொட்டு பார்க்கலாம்.

சிவாஜிக்காக TMS பாடியவை : 

கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான் - கீழ்வானம் சிவக்கும் 
பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே - நீதிபதி 
ஐம்பதிலும் ஆசை வரும் - ரிஷிமூலம் 
நாளை நாளை என்றிருந்தேன் - உத்தமன் 
பொண்ணுக்கென்ன அழகு - என் அண்ணன் 
செந்தமிழ் பாடும் - வைர நெஞ்சம் 
பூமாலையில் ஓர் மல்லிகை - ஊட்டி வரை உறவு 
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு - தியாகம் 
கண்ணிரெண்டில் மை எழுதி கன்னத்திலே பொட்டு வைத்து - வா கண்ணா வா 
அன்பு நடமாடும் கலைக்கூடமே - அவன் தான் மனிதன் 
ஆகாய பந்தலிலே - பொன்னூஞ்சல் 

புரட்சித் தலைவர் MGR அவர்களுக்காக TMS பாடியது : 

உனது விழியில் எனது பார்வை - நான் ஏன் பிறந்தேன் 
நிலவு ஒரு பெண்ணாகி - உலகம் சுற்றும் வாலிபன் 
நீ என்னென்ன சொன்னாலும் - நேற்று இன்று நாளை 
தாயகத்தின் சுதந்திரமே - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 
பொன்னந்தி மாலைப் பொழுது - இதய வீணை 
திருவளர் செல்வியோ - ராமன் தேடிய சீதை 
கல்யாண வளையோசை - உரிமைக் குரல் 
இன்பமே உந்தன் பேர் - இதயக்கனி 
ஆடலுடன் பாடலைக் கேட்டு - சிரித்து வாழ வேண்டும் 
உள்ளம் என்றொரு கோவிலிலே - அன்பே வா 



இவை எல்லாவற்றையும் விட மேலாக TMS என்று நினைக்கும் போதே நெஞ்சில் எழுகின்ற பாடல் - எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் இந்த பாடலோடு தான் இசை நிகழ்ச்சிகள் துவக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை ஏற்படுத்தி வைத்த பாடல் -

என் மனமெல்லாம் இன்னமும் நிறைந்திருக்கும் TMS பாடல் -

அது 

"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...."

இந்த ஒரு பாடல் போதும் - இசை உள்ளவரை அவர் பெயர் நிலைத்து நிற்க. 



மனிதர்களுக்கு மரணம் உண்டு - மகத்தானவர்கள் மரணத்தை வென்று நிற்பார்கள். 

TMS - மகத்தான மாமனிதன்.


Comments