டூரிங் டாக்கீஸ் : (5)
டூரிங் டாக்கீஸ் : (5)
இசை கேட்டால் புவி அசைந்தாடும் - (II)
TMS - ஜானகி இணை என்னை கவர்ந்தது பற்றி முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்.
ஏனோ தெரியவில்லை TMS உச்சத்தில் இருந்த நேரத்திலேயே ஜானகி அறிமுகம் ஆகிவிட்டிருந்தாலும் அவருக்கான பிரத்தியேக இடத்தைப் பிடிக்க அவர் நீண்ட காலம் காத்திருக்க வேண்டி இருந்தது - இளையராஜா வரும் வரை.
அதுவரை சுசிலா அவர்களுடன் தான் பெரும்பாலான பாடல்களை TMS பாடிக் கொண்டிருந்தார்.
இருப்பினும் அவ்வப்போது சில பாடல்களை ஜானகியுடன் இணைந்து TMS பாடிக் கொண்டு தான் இருந்தார். அவை எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்த போதிலும் மனம் மயக்கும் பாடல்களாகவே இருந்து கொண்டிருக்கின்றன.
TMS, ஜானகி அம்மா அவர்களுடன் இணைந்து பாடிய மேலும் சில பாடல்களையும் பார்க்கலாம்.
பொன்னாள் இதுபோலே - பூம்புகார்
சின்னஞ்சிறிய வண்ணப்பறவை - குங்குமம்
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் - சிரித்து வாழ வேண்டும்
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் - என் அண்ணன்
இளமை நாட்டியசாலை - கல்யாணமாம் கல்யாணம்
அழகுக்கு மறுபெயர் - அன்னமிட்ட கை
தோரணம் ஆடிடும் - வெற்றிக்கு ஒருவன்
கட்டபுள்ள குட்டபுள்ள - பைரவி
தேவைகள் ஆயிரம் - தேவைகள்
உலகம் உலகம் - உலகம் சுற்றும் வாலிபன்
*************
TMS அவர்கள் வாணி ஜெயராமுடன் இணைந்து எழுபதுகளின் துவக்கத்தில் இருந்து பல பாடல்கள் பாடியுள்ளார்.
சுசிலா அவர்களின் குரல் எந்த அளவுக்கு கச்சிதமாக TMS அவர்களுடன் இணை சேர்ந்ததோ, அதே அளவுக்கு வாணி அவர்களின் குரலும் இணையானது.
அவர்கள் பாடிய அற்புதமான சில பாடல்களைப் பார்க்கலாம்.
வாணி அவர்கள் பாடிய முதல் தமிழ்த் திரைப்பாடல் TMS அவர்களுடன் இணைந்து தான்.'வீட்டுக்கு வந்த மருமகள்' படத்தில் சங்கர் கணேஷ் இசை அமைப்பில் வெளிவந்த 'ஓர் இடம், உன்னிடம்...' பாடல் தான் அது. பின்னர் நிறைய பாடல்களை TMS அவர்களுடன் இணைந்து பாடி ஹிட்டாக்கியிருக்கிறார்.
வாணி அவர்களுடன் இணைந்து TMS பாடிய சில பாடல்கள் :
பொன் மனசெம்மலை - சிரித்து வாழ வேண்டும்
சுகம் சுகம் இது - பாத பூஜை
வா இளமை அழைக்கிறது - எங்கம்மா சபதம்
புதியதோர் உலகம் செய்வோம் - பல்லாண்டு வாழ்க
நாள் நல்ல நாள் - பணக்கார பெண்
ஆண்டவன் இல்லா உலகமிது - ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
அம்மானை அழகு மிகும் - அவன் ஒரு சரித்திரம்
மாலை இட்டான் ஒரு மன்னன் - அவன் ஒரு சரித்திரம்
கண்ணழகு சிங்காரிக்கு - மீனவ நண்பன்
இலங்கையின் இளம் குயில் - பைலட் பிரேம்நாத்
*************
TMS அவர்கள், சிவாஜி-MGR காலம் துவங்கி, சிவகுமார், ஜெயசங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் ஆகியோர்களின் காலத்திலும், அதனையும் கடந்து கமல்-ரஜினி, காலத்திலும், பின்னர் ராஜேந்தர் யுகத்திலும் தனது குரல் வளத்தால் தமிழ்த் திரை உலகை கட்டிப் போட்டு வைத்திருந்தார் என்றே சொல்லலாம்.
TMS அவர்களின் பழைய பாடல்கள் பலவற்றை கேட்டு இரசித்திருந்த போதிலும், என்னுடைய கால வரையறையை எழுபதுகளுக்கு பின்னரே அமைத்துக் கொண்டுள்ளேன். ஏனெனில் அந்த காலக் கட்டத்தில் தான் ஓரளவு விவரம் தெரிந்து நான் திரைப்படங்கள் பார்க்கத் துவங்கினேன். மற்றும் பாடல்கள் கேட்கத் துவங்கினேன். அந்த கால கட்டத்தில் வெளி வந்த பாடல்கள் தான் என் நினைவறையில் நிரம்பியிருக்கின்றன.
எழுபதுகளுக்கு பின்னர் வெளிவந்து இன்னும் என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ள சில பாடல்களை வரும் பகுதிகளில் பார்ப்போம்.

- Get link
- X
- Other Apps



Comments
Post a Comment