டூரிங் டாக்கீஸ் : (10)

டூரிங் டாக்கீஸ்  (10)


பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டு தான் ....!  - (IV)

மோகனின் ஆரம்ப காலத்திய படங்கள் அவைகளில் இடம்பெற்ற பாடல்களுக்காகவே பெரு  வெற்றி பெற்றன என்று கூறுவதில் உண்மை இருந்தாலும், பாடல்கள் மட்டுமன்றி, நல்ல நகைச்சுவை, செண்டிமெண்ட் முடிசுகள், இளமையான காதல் காட்சிகள் ஆகியவைகளும் சம விகிதத்தில் கலந்திருந்தன. 

பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், மனைவி சொல்லே மந்திரம், சகாதேவன் மகாதேவன், உதய கீதம், இதயக்கோவில், ஆகிய படங்களில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் இன்றும் ரசிக்கத்தக்கதாகவே உள்ளன. 

மோகன் நடித்த படங்களில் இடம்பெற்று சூப்பர் ஹிட் ஆன பாடல்களைப் பற்றி நம்மில் பலர் கண்டிப்பாக அறிந்திருப்போம். அவர் நடித்த படங்களில் இடம் பெற்றிருந்த சூப்பர் ஹிட் மற்றும் இனிமையான பாடல்கள் சிலவற்றை இங்கு காணலாம்.
~

நெஞ்சத்தை கிள்ளாதே - இளையராஜா 
1. உறவெனும் புதிய பாதை 
2. ஏ தென்றலே இனி நாளும் பாட வா 

கிளிஞ்சல்கள் - T. ராஜேந்தர் 
1. அழகினில் விளைந்தது 
2. காதல் ஒருவழிப் பாதை பயணம் 

பயணங்கள் முடிவதில்லை - இளையராஜா 
1. சாலையோரம் சோலை ஒன்று 
2. ராக தீபம் ஏற்றும் நேரம் 
3. தோகை இளமயில் 
4. வைகறையில் வைகை கரையில் 

கோபுரங்கள் சாய்வதில்லை - இளையராஜா 
1. பூவாடைக் காற்று 

ஜோதி - இளையராஜா 
1. சிரிச்சா கொல்லிமலை குயிலு 

நெஞ்சமெல்லாம் நீயே - சங்கர் கணேஷ் 
1. யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது 


சரணாலயம் - எம்.எஸ். விஸ்வநாதன் 
1. எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை 

தூங்காத கண்ணின்று ஒன்று - கே.வி. மகாதேவன் 
1. இதய வாசல் திறந்த போது 

இளமை காலங்கள் - இளைய ராஜா 
1. பாட வந்ததோ கானம் 
2. ராகவனே ரமணா ரகு நாத 
3. இசை மேடையில் இந்த வேளையில் 
4. ஈரமான ரோஜாவே 

மகுடி - இளையராஜா 
1. நீலக்குயிலே உன்னோடு தான் 
2. கரட்டோரம் மூங்கில் காடு 

விதி - சங்கர் கணேஷ் 
1. தேவதாசும் நானும் 

உன்னை நான் சந்தித்தேன் - இளையராஜா 
1. தாலாட்டு மாறிப்போனதே 
2. உன்னைக் காணும் நேரம் 
3. ஹே ஐ லவ் யு ...
4. தேவன் தந்த வீணை 

ஓசை - சங்கர் கணேஷ் 
1. ஒரு பாடல் நான் கேட்டேன் 
2. பூவே பூவே சின்னப் பூவே 

நூறாவது நாள் - இளையராஜா 
1. விழியிலே மணி விழியில் 
2. உருகுதே இதயமே அருகிலே வா வா 
3. உலகம் முழுதும் பழைய ராத்திரி 

உதய கீதம் - இளையராஜா 
1. சங்கீத மேகம் 
2. பாடு நிலாவே 
3. தேனே தென்பாண்டி மீனே 

இதயக்கோயில் - இளையராஜா 
1. வானுயர்ந்த சோலையிலே 
2. பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டு தான் 

தென்றலே என்னைத் தொடு - இளையராஜா 
1. தென்றல் வந்து 
2. புதிய பூவிது 
3. கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் 

பிள்ளை நிலா - இளையராஜா 
1. ராஜா மகள் 

குங்குமச்சிமிழ் - இளையராஜா 
1. நிலவு தூங்கும் நேரம் 

மெல்லத் திறந்தது கதவு - இளையராஜா-எம்.எஸ்.விஸ்வநாதன் 
1. வா வெண்ணிலா 
2. ஊரு சனம் தூங்கிருச்சு 
3. குழலூதும் கண்ணனுக்கு 
4. தேடும் கண் பார்வை 

உயிரே உனக்காக - லக்ஷ்மிகாந்த் பியாரிலால் 
1. பன்னீரில் நனைந்த பூக்கள் 
2. பல்லவி இல்லாமல் 

மௌன ராகம் - இளையராஜா 
1. மன்றம் வந்த தென்றலுக்கு 
2. சின்ன சின்ன 
3. பனி விழும் இரவு 

டிசெம்பர் பூக்கள் - இளையராஜா 
1. அழகாக சிரித்தது அந்த நிலவு 

ரெட்டை வால் குருவி - இளையராஜா 
1. கண்ணன் வந்து பாடுகிறான் 
2. ராஜ ராஜ சோழன் நான் 

தீர்த்தக் கரையினிலே - இளையராஜா 
1. கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே 
2. விழியில் புது கவிதை படித்தேன் 

உனக்காக ஒரு ரோஜா - T. ராஜேந்தர் 
1. ஒரு மோக ராகம் 
2. நதியோடு கதை பேச 
3. இளவட்ட நிலவுக்கு 

பாரு பாரு பட்டணம் பாரு - இளையராஜா 
1. யார் தூரிகை செய்த ஓவியம் 
2. தென்றல் 

ஆயிரம் பூக்கள் மலரட்டும் - வி.எஸ்.நரசிம்மன் 
1. பூ மேடையோ, பொன் வீணையோ 
2. ஆயிரம் பூக்கள் மலரட்டும் 

பாசமழை - இளையராஜா 
1. ஒரு பாட்டு உன் மனச இழுக்குதா 


1980 களின் துவக்கத்தில் தமிழ்த் திரை உலகில் மெதுவாக கால் பதித்து அடி மேல் அடி வைத்து தனக்கான இடத்தை கெட்டியாக பிடித்து வைத்துக் கொண்டிருந்த மோகன், எண்பதுகளின் இறுதியில் மெல்ல மெல்ல அந்த இடத்தை இழக்கத் துவங்கினார். 

ஒரே மாதிரியான நடிப்பும், சிரிப்பை வரவழைக்க முடியாத நகைச்சுவை காட்சிகளும், மக்கள் மனதை கவர முடியாத பாடல்களும், பலவீனமான கதை அம்சம் கொண்ட கதைகளும் ஒரு லெவலுக்கு மேல் மக்களின் மனதில் எழும்பத் துவங்கிய சலிப்பு உணர்ச்சியும், மோகனின் மார்கெட்டை மெதுவே வீழ்த்தத் துவங்கின. 

பத்தாண்டுகள் இடைவெளியில் புறப்பட்டிருந்த புதிய தலைமுறை முன் மோகன் தனது கவர்ச்சியை இழந்து விட்டார்.

தொன்னூறுகளில் சின்னத் திரை வெகுவாக வியாபிக்கத் துவங்கிய காலத்தில் திரை உலகமும் சற்று தடுமாறத் துவங்கியது.  மோகன் போன்றோர் முற்றிலும் விழுந்து விட்டனர்.   

இதன் நடுவே அவருக்கு எய்ட்ஸ் என்றும், அவர் மரணமடைந்து விட்டார் என்றும் பரவிய வதந்திகள் அவரை நிலை குலைய வைத்தன. 

இவற்றில் இருந்து மீண்டு, நான் இங்கு தான் இருக்கிறேன் என்று காட்ட முயன்ற மோகன் 'சுட்ட பழம்' எடுத்தார். கையை சுட்டுக் கொண்டார். 

எந்த சின்னத்திரையின் எழுச்சி அவரைப் போன்ற நடிகர்களை விழ வைத்ததோ, அந்த சின்னத் திரையிலேயே "தொடர் தயாரிப்பாளர்" என்ற புதிய அவதாரம் எடுத்து மெகா சீரியல்கள் தயாரிக்கத் துவங்கியது ஒரு இனிய முரண் தான். 
~

பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டு தான் 
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத் தான் ....

பாடலைக் கேட்கும்போது மைக்கை பிடித்துக் கொண்டு,  தெற்றுப்பல் தெரிய புன்னகை சிந்திக் கொண்டு,  தானே பாடுவது போன்ற பாவம் காண்பிக்கும் மோகன், மனதின் ஓரத்தில் தனி ஆசனம் போட்டு இன்னமும் உட்கார்ந்து கொண்டு தான் இருக்கிறார்.  

Comments