வாசிப்பு 

~

கடோபநிஷதம் 


ந்தை செய்யும் யாகத்தின்போது கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருந்த மகனிடம் "அடுத்து உன்னை யாகக் குண்டத்தில் போடப் போகிறேன்"என்று தந்தை விளையாட்டாய் சொன்ன வார்த்தையை மெய்ப்பிப்பதற்காக யாகக்குண்டத்தில் விழுந்து, யமலோக வாசலில் யமனுக்காகக் காத்திருந்து யமனிடம் வாழ்க்கை என்றால் என்ன ? மரணம் என்பது யாது ? கடவுள் யார் என்றெல்லாம் கேள்விகள் கேட்டு யமனை பிரமிக்க வைத்து அவனிடமிருந்து பதில்களையும் வரங்களையும் பெற்றவன் சிறுவன் நஸிகேதன்.
~
பாரத நாட்டின் ஒவ்வொரு சிறுவனும் நஸிகேதன் போல் இருக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.

கதையை விடுங்கள். வாழ்க்கை என்னும் மாபெரும் புதிருக்கான விடைகள் பலவற்றுக்கான க்ளூ கடோபநிஷதத்தில் இருக்கின்றன.
~
கடோபனிஷதத்தின் ஸம்ஸ்க்ருத மூலமும், தத்துவ (வி)ஸாரங்களுடனான அதன் எளிய தமிழ் பொழிபெயர்ப்பும் ராமகிருஷ்ண மடத்தின் துறவி சுவாமி ஆத்மானந்தரால் அருமையாகத் தொகுக்கப்பட்டு மிக மலிவு விலைப் பதிப்பாக ராமகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்டுள்ளது.


அற்புதமான புத்தகம்.
~
என்னை இடதில் இருந்து வலத்திற்கு திருப்பியதில் இந்தப் புத்தகத்துக்கும் முக்கியமான பங்கு உண்டு. :)
~
படம் : Dominique Amendola
through :  Jeeva Nanthan
:)

Comments