டூரிங் டாக்கீஸ் : (1)

டூரிங் டாக்கீஸ்  (1)





ண்ணதாசனும், வாலியும் மட்டுமே ஏகபோகமாக கோலோச்சி வந்த நேரத்தில் இளையராஜாவின் வருகை புதிய பாடகர்களோடு மட்டுமல்லாமல் புதிய பாடலாசிரியர்கள் பலரையும் உருவாக்கிவிட்டது. 

பஞ்சு அருணாசலம், எம்.ஜி.வல்லபன்,முத்துலிங்கம்,புலமைபித்தன்,(இவர் ராஜாவுக்கு முன்பே அறிமுகமாகி விட்டிருந்தாலும் ராஜாவின் வருகைக்கு பிறகு புகழ் பெறத் துவங்கினார்) வைரமுத்து - இந்த வரிசையில் பாவலர் குழுவில் கிடார் வாசிப்பவராக இருந்த அமர்சிங் என்னும் கங்கை அமரனும் புதிய பாடல் ஆசிரியர் ஆகிவிட்டார்.

பன்முக திறமை வாய்ந்த கங்கை அமரன் பாடல்கள் எழுதுவதுடன் மட்டுமல்லாமல் இசை அமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் போன்ற அவதாரங்களையும் எடுத்து அசத்தியவர். 

இளையராஜா - வைரமுத்து கூட்டணி கோலோச்சிய காலத்திலும் இவர் தனக்கென ஒரு பாட்டையில் ஆரவாரமாக பயணம் செய்து கொண்டிருந்தார்.

வாடி என் கப்பக்கிழங்கு, ஓரம்போ ருக்குமணி வண்டி வருது, அண்ணே அண்ணே, போன்ற பாடல்களின் மூலம் இவர் பரபரப்பாக அறியப்பட்டாலும் பல அற்புதமான பாடல்களையும் இவர் எழுதியிருக்கிறார் என்று அறியும்போது ஆச்சரியம் ஏற்படுகிறது.
 ~

ஞாபகம் இல்லையோ - மலர்களே மலருங்கள் 
சிறு பொன்மணி - கல்லுக்குள் ஈரம் 
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே - நண்டு
 மலர்களிலே ஆராதனை - கரும்பு வில் 
ஆனந்த ராகம் - பன்னீர் புஷ்பங்கள் 
விழியே விளக்கொன்று ஏற்று - தழுவாத கைகள் 
நான் என்பது - சூரசம்ஹாரம் 
நதியோடும் கரையோரம் - ஆவாரம்பூ 
பூவிலே மேடை - பகல் நிலவு 
பூவும் தென்றல் காற்றும் - பிக் பாக்கெட் 
ராதா அழைக்கிறாள் காதல் ராகம் இசைக்கிறாள் - தெற்க்கதி கள்ளன் 
தவிக்குது தயங்குது ஒரு மனது - நதியை தேடி வந்த கடல் 
தென் பாண்டி தமிழே - பாசப்பறவைகள் 
தோகை இளமயில் - பயணங்கள் முடிவதில்லை 
 ~
பட்டியல் தொடர்ந்து கொண்டே போகிறது. ..... 

இந்த திறமையாளரை தமிழ்த் திரையுலகம் சரிவர அங்கீகரிக்க வில்லையோ ?

ஆனால், அவர் எதை பற்றியும் கவலைப்படாமல் இந்த தலைமுறை கலைஞர்களுடனும் அற்புதமாக இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

தலைமுறை இடைவெளி கிடையாது என்பதும் இவரின் ஸ்பெஷாலிடி தான்.



Comments

Post a Comment