வாழ்த்துகள் - HBD வாழ்க்கை

வாழ்த்துகள்

நேற்று தான் முதலில் பார்த்தது போல் இருக்கிறது. அதற்குள் எவ்வளவு நாட்கள்.

பதின்பருவ முடிவில் என்னுடன் இணைந்து, தனக்கு தெரிந்த குறைந்த மொழியறிவுடன் டெல்ட்டாவின் சிறு நகரம் ஒன்றில் தன் புது  மண வாழ்வை துவக்கி,  

என் வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் அனைத்திலும் இறுக என் கைகளைப்பற்றிக் கொண்டு நானிருக்கிறேன் உங்களுடன் என்ற தைரியத்தையும், ஆதரவினையும் அள்ளி வழங்கி, 

என் சான்றோர்கள், நல் நண்பர்கள் அனைவரிடமும் குறையா அன்புடனும், விளிம்பு நிலை மக்களிடம் பரிவான நட்புடனும் நிறைந்த பாசத்துடனும் அனைவரையும் தன்பால் அன்பால் அணைத்து, 

என்றும் வண்ணமயமாக வாழ்வை வளப்படுத்திக் கொண்டிருக்கும் என் நேச சகதர்மினிக்கு, என் அன்புத் தோழிக்கு, 

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். வாழ்க்கை அழகானது என்பதை உன்னால் அறிந்துகொண்டேன். 

நன்றி. 

❤️

Comments