அஞ்சலி - ஊஞ்சலாடிய இளமை - ஸ்ரீதர்



ஸ்ரீதர் - ஸ்டைலிஷ் இயக்குநர்


நான் முதலில் பார்த்த இவரின் படம் அழகே உன்னை ஆராதிக்கிறேன் தான்.

அதன் பின்னர்

இளமை ஊஞ்சலாடுகிறது
நினைவெல்லாம் நித்யா
துடிக்கும் கரங்கள்
ஆலயதீபம்
நானும் ஒரு தொழிலாளி
தென்றலே என்னைத் தொடு

இடையிடையே நிறைய பழைய படங்கள் டிவியிலும் டிவிடியிலும் பார்த்திருக்கிறேன்.

கல்யாணப்பரிசு
தேன் நிலவு
சுமைதாங்கி
நெஞ்சில் ஒரு ஆலயம்
நெஞ்சம் மறப்பதில்லை
காதலிக்க நேரமில்லை
வெண்ணிற ஆடை
சிவந்த மண்
உரிமைக்குரல்
ஒரு ஓடை நதியாகிறது.

கிட்டத்தட்ட எல்லா ஜானரிலும் படம் பண்ணிய பழைய இயக்குநர் இவர் மட்டுமே என்று நினைக்கிறேன். என்னை வியக்க வைத்த தமிழ் திரை இயக்குனர்களில் முக்கியமானவர் ஸ்ரீதர்.

உடல்நலம் குன்றியிருந்தபோது கூட தனது திரையுலக நண்பர்களை அழைத்து புதிய படம் ஒன்று எடுப்பது பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தார் என்று படித்திருக்கிறேன்.

நான் பார்த்த அவரின் படங்களில் எனக்கு ரொம்ப பிடித்தது 

ஒரு ஓடை நதியாகிறது.

ரொம்ப பிடிக்காதது.... 

சிவந்த மண். 
~
பி.கு : கடைசியாக நான் குறிப்பிட்டது இங்கு பெரும்பாலானோருக்கு கோபம்  ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன். இருந்தாலும் This is my opinion. அவ்வளவு தான்.

Start Music 😜


Comments