அமேரிக்கா - அடடே

அமேரிக்கா 
~
உலகமெல்லாம் அப்போ ஒன்னா ஒரே நிலப்பரப்பா இருந்தப்போ செம்பட்டை முடியும், நீலக்கண்களும் கொண்ட கபில முனிவர் இருந்த ஆரண்யம் தான் தற்போதைய #கலிஃபோர்னியா. 

கபில முனிவரின் குழந்தைகள் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து பழமையான எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த இடமே இப்போது #டெத் #வேளி என்றழைக்கப்படுகிறது....

அந்த இடத்தில் சங்கு, சக்கர முத்திரைகளும் அகழ்வாராய்ச்சி யில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
மகாபெரியவரே இதை சொல்லியிருக்கிறார்....... 

இப்படி ஒரு பெண்மணி பேசிக்கொண்டே போகிறார் ஒரு யூ டியுப் சேனலில்.
~
பாவம் மகாபெரியவர். அவரை எது எதற்கு தான் சாட்சிக்கு அழைப்பது என்று வகை தொகை இல்லாமலேயே போய்க்கொண்டிருக்கிறது. 
~
சீஸ் பஜ்ஜி செய்வது எப்படி? ன்கிற புரோகிராம்ல தான் இப்படி.

ஆனால், சீஸ் பஜ்ஜி ரெஸிபி நன்றாகவே இருக்கிறது. 

😛

Comments