லைப்ரரி - "ஒரு லட்சம் புத்தகங்கள்" - சுஜாதா
லைப்ரரி
"ஒரு லட்சம் புத்தகங்கள்" - சுஜாதா
பல ஆண்டுகளுக்கு முன் படித்தது.
ஒரு தம்பியுடன் சில நாட்களுக்கு முன் வாட்ஸப்பில் உரையாடிக் கொண்டிருந்தபோது சுஜாதாவின் சில புத்தகங்கள் பற்றி பேச்சு வந்தது.
அப்போது அவரின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக "ஒரு லட்சம் புத்தகங்கள்" பற்றிக் குறிப்பிட்டேன்.
1983ம் ஆண்டு ஜூலை மாதம் இனக்கலவரத்தில் இலங்கை பற்றி எறிந்தபோது, மிகபெரிய யாழ்ப்பாண நூலகம் தீயூட்டிக் கொளுத்தப்பட்டதையும் , அதில் இருந்த ஒரு லட்சம் புத்தகங்கள் விடிய விடிய எரிந்து அழிந்ததையும் பேக்டிராப் ஆகக் கொண்டு சுஜாதா எழுதிய அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல் ஏற்பட்டது.
நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த Telegram சமூக வலைதளத்தின் "நாவல்கள்" தளத்தில் இக்கதை கிடைக்குமா என்று கேட்டிருந்தேன். கேட்ட சில நிமிடங்களில் அக்கதையின் PDF வடிவம் எனக்காக அப்லோட் செய்யப்பட்டது. பிரமாதமாக இயங்கும் Telegram "நாவல்கள்" குழுவுக்கு கோடி வந்தனங்கள்.
ஏக் தம்மில் படித்து முடித்தேன்.
மனசு பாரமாக இருக்கிறது.
ரியலி வீ மிஸ் யூ சுஜாதா சார்.
😥😥


Comments
Post a Comment